Sunday, April 23, 2017

நாகையநல்லூர் சீதா கல்யாணம் 2017

நாகையநல்லூர் சீதா கல்யாணம் 2017
====================================
 Special திவ்ய நாம பஜனை பலராம பாகவதர்.

ரொம்ப grand LCD monitors வச்சு இரவு முழுவதும் பஜனை.  அக்ரஹாரம் முழுவதும் decoration lights. பாதி வீடுகள் பிராமணர்கள் இப்போ இல்லை . ஆனாலும் மற்ற கிராமத்து மக்களும் பஜனை புரியாவிட்டாலும் அதே traditionகாக grandஆக செய்து இருந்தார்கள். கேலி செய்யாமல் சிரத்தையோடு இருந்தார்கள்.  வாழை மரம் decorations அருமை.

எனக்கு திண்ணையில் பஜனை கேட்ட பழைய ஞாபகங்கள். பூ விற்ற பூக்காரர் select பண்ணி எனக்கு பூ எடுத்து தந்த்து , வீட்டுக்கு போக போறேன் சாமி என்றதும் எனக்கு மனசு வலித்தது . சாமி என்று கிராமத்தில் சொல்லும் வழக்கம் இருந்தாலும் அதற்கு என் போன்றவர் தகுதியானவரா? சாமி என்று அழைப்பதே எளிமை தவஸ் ஜபம. என்று இருக்கும் பிராமணர்களை தான். அந்த மரியாதையெல்லாம் ஐடி கம்பேனிக்கு வந்த நாள்ல போயாச்சு.

இரவு முழுவதும் பஜனை. நடுவே பாதாம் பால் வந்தது.  Sip பண்ணாம தூக்கி சாப்டும் முறை உண்டு. என்னையறியாமல் sip பண்ணியது சுவாரஸ்ய அனுபவம். பக்கத்தில் இருந்த ஒருவர் thats OK. It happens என்றார்

ஒரு ஜந்து cabs taxi வந்து இருந்த்து. இரவு முழுக்க அந்த drivers தூங்க முடியாமல் தவித்தார்கள்.  பகவன் நாமா தானாக அவர்கள் காதில் விழுவது பாக்கியம் தான் என்றாலும்.

Marathi abhangs ரொம்பவே இந்த பாழ் மனசை உருக்கும் அருமையான பாடல்கள்.

மொத்தத்தில் office tension deadlines எல்லாம் மறந்து நிம்மதியாய் இருந்தேன நான். இரவு ஒரு மணிக்கு மேல் கிளம்பிட்டேன்

Mic speaker sound போகும் வரை திரும்பி திரும்பி பார்த்தேன் வர மனசில்லாமல்.






1 comment:

  1. It is nice to see your photo after quite a long time Krishnamoorthy

    ReplyDelete